fbpx
Connect with us

Cinemapettai

அண்ணன் சிபாரிசில் நுழைந்து தோல்வி அடைந்த தம்பிகள்.. வாய் உள்ள புள்ளதான் பொழைக்கும்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அண்ணன் சிபாரிசில் நுழைந்து தோல்வி அடைந்த தம்பிகள்.. வாய் உள்ள புள்ளதான் பொழைக்கும்

பிரபலங்களின் தம்பிகளாக தமிழ் சினிமாவில் நுழைந்து சில படங்களில் நடித்து வெற்றி பெற முடியாமல் ஆள விடுங்கடா சாமி என ஓட்டம் பிடித்த பல பேர் இங்கு உள்ளனர். அவர்களின் லிஸ்ட் இதோ:

முருகதாஸ் தம்பி திலீபன்:

திலீபன் அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த படம் வத்திக்குச்சி. முருகதாஸ் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் பெரும் தோல்வியை சந்தித்து அதன் பிறகு திலீபன் தமிழ் சினிமாவை விட்டே ஓடிவிட்டார்.

ஜீவா அண்ணன் ஜித்தன் ரமேஷ்:

தெரியாத்தனமாக ஒரு சிலருக்கு அவர்களது முதல் படம் வெற்றி பெற்றுவிடும். அப்படி அதிர்ஷ்டத்தில் உள்ளே நுழைந்தவர் ஜித்தன் ரமேஷ். ஜித்தன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது வரை அவர்கள் ஒரு வெற்றி கூட கொடுக்க முடியவில்லை. இதனால் சினிமாவில் நடிப்பதில்லை என முடிவெடுத்து விட்டார்.

ஆர்யா தம்பி சத்யா:

சத்யா நடித்ததில் அமரகாவியம் படம் மட்டுமே ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதனால் மீண்டும் சினிமாவில் பெரிய அளவு இடம் பிடிப்பார் என எதிர்பார்க் கையில் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி விட்டார். இப்போது கைவசம் ஒரே ஒரு படம் மட்டும் வைத்துள்ளாராம்.

கமலஹாசன் அண்ணன் சாருஹாசன்:

கமலுக்கு ஜோடியாக சினிமாவில் பெரிய இடத்தை பிடித்து விட வேண்டும் என நினைத்து கமலின் இமேஜுக்கு கூட தொட முடியாத அளவுக்கு மண்ணை கவ்விய அவர்தான் சாருகாசன்.

பிரபுதேவா தம்பி நாகேந்திர பிரசாத்:

பிரபுதேவாவின் உதவியால் சினிமாவில் நுழைந்த நாகேந்திர பிரசாத் நடன இயக்குனராக இருந்து சினிமாவில் ஹீரோவாக நடிக்க போராடி வருகிறார். சமீபகாலமாக இவரை துணை கதாபாத்திரங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. கடைசியாக விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில்கூட நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹீரோ வேஷம் மட்டும் கிடையாது என்கிறார்கள் கோலிவுட்டில்.

தேவயானி தம்பி நகுல்:

இவரும் சில வெற்றிப் படங்களை கொடுத்து இருந்தாலும் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வரவேற்பை பெற்ற படம் என்றால் அது வல்லினம் தான்.

Continue Reading
To Top