Tamil Cinema News | சினிமா செய்திகள்
டிஆர்பி ரேட்டிங்கை எகிறவிட முன்னணி சேனல்கள் எடுத்துள்ள முயற்சி.. வெல்லப்போவது யார்?
தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணியாக இருப்பது விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவைதான். இவை மூன்றும் தான் டிஆர்பிகாக போட்டாபோட்டி போட்டுக் கொண்டிருப்பர்
மேலும் டிஆர்பியை ஏற்றும் வகையில் அவ்வப்போது புது சீரியல்களையும், ரியாலிட்டி ஷோகளையும் அறிமுகப்படுத்தி மக்களை தங்களுடைய சேனல்களை நோக்கி திசை திருப்புவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை மிக அருகில் வந்ததால் புது புது படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனராம் அந்தந்த சேனல் நிர்வாகிகள்.
அதாவது கொரோனா வைரஸ் பிரச்சனையில் கூட தீபாவளி பண்டிகைக்காக மக்கள் தங்களை எப்பொழுதும் போல தயாராகி கொண்டிருக்கின்றனர். அதேபோல் வருடாவருடம் புது படங்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்வர். இதனால் சேனல்களுக்கு இடையே கடும் போட்டியும் நிலவும்.
ஆனால் சேனல் நிர்வாகிகள், இந்த வருடம் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக பல மாதங்களாக தியேட்டர்கள் மூடி இருந்ததால், சமீபத்தில் வெளியான படங்களை டிவியில் வெளியிட முடிவு செய்திருக்கின்றனராம்.
ஆகையால், இந்த வருடம் தீபாவளிக்கு டிவியில் புதிய படங்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை குஷிப்படுத்த தயாராக இருக்கின்றன.
முன்னணி சேனல்களில் ஒளிபரப்பப்பட உள்ள படங்களின் லிஸ்ட்:
- சன்- பிகில்
- விஜய் டிவி- வானம் கொட்டட்டும்
- ஜீதமிழ்- நான் சிரித்தாள், என்னை நோக்கி பாயும் தோட்டா
எனவே, இவ்வாறு புது புது படங்கள் பல டிவியில் ஒளிபரப்பாக தயாராகி இருப்பதை எண்ணி ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், டி ஆர் பி ரேசில் எந்த சேனல் வெற்றி பெறப்போகிறது என்பதை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
