ரீ ரிலீஸ் பண்ணியாச்சும் காசு பார்க்கலாம்.. தியேட்டர்களுக்கு ஆப்பு வைச்ச பிரபல சேனல்

Theater: தியேட்டர்களின் வியாபாரம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல தரமான படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. ஆனால் அப்படிப்பட்ட படங்கள் வருகிறதா? என்று கேட்டால் அது நிச்சயம் கேள்வி குறிதான்.

பிரம்மாண்டம் என்ற பெயரில் காசை தண்ணியாக செலவழிக்கும் முதலாளிகள் கதையில் கவனம் செலுத்துவதில்லை. ஏனென்றால் இப்போது வெளிவரும் படங்கள் அனைத்தும் வெட்டு, குத்து, வெடிகுண்டு, துப்பாக்கி சத்தம், ரத்தம் என அனைத்தும் கலந்த கலவையாக தான் இருக்கிறது.

அதனாலயே டாப் ஹீரோக்களின் படங்கள் கூட தோல்வியை தழுவி வருகிறது. மேலும் இந்த வருடம் வெளிவந்த அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம், சைரன் போன்ற படங்கள் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தவில்லை. இப்படியே போனால் தியேட்டர்களின் கதி அதோகதி தான்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்களுக்கு நடு ரோட்டில் கிடைத்த டோஸ்.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கோமதி

அந்த பயத்தினாலேயே சில தியேட்டர்கள் பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். இதற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைப்பதால் இதை வைத்தாவது காசு பார்க்கலாம் என்ற முடிவுக்கு பல திரையரங்கு உரிமையாளர்கள் வந்துள்ளதாக அதிர்ச்சி தகவலும் கசிந்து வருகிறது.

அந்த வகையில் கமலா தியேட்டர் உட்பட பல திரையரங்குகளில் வலிமை, மாஸ்டர், வாலி என பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும் வரை இதை வைத்தாவது கல்லா கட்டலாம் என்ற பிளான் தான். ஆனால் அதற்கும் ஆப்பு வைக்கும் வகையில் கே டிவி ஒரு வேலையை பார்த்து இருக்கிறது.

எப்போதுமே நல்ல படங்களை திரையிட்டு வரும் இந்த சேனல் தற்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளனர். அதில் சம்சாரம் அது மின்சாரம் என்ற சூப்பர் ஹிட் படம் இன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் டிக்கெட் எல்லாம் வாங்க வேண்டாம் கே டிவில ஃப்ரீயா பாருங்க என நக்கலாகவும் பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே தியேட்டர்கள் கே டிவியாக மாறி வருகிறது என நெட்டிசன்கள் அலப்பறை பண்ணி வந்த நிலையில் கே டிவியே அவர்களை பங்கமாக கலாய்த்து உள்ளது. இனிமேலாவது கோலிவுட் சுதாரித்துக் கொண்டால் சரி. இல்லையென்றால் தியேட்டர்களின் பாடு திண்டாட்டம் தான்.

Also read: விஜய் டிவியின் அராத்து நடிகையை தட்டி தூக்கிய ஜீ தமிழ்.. இப்படியா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது

Next Story

- Advertisement -