Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் படத்தை பல முறை பார்த்துவிட்டேன், பார்க்க பார்க்க புதுசா இருக்கு.. வெறியேத்தும் பிரபலம்
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்டூடியோ லலித் குமார் தயாரித்துள்ளார். முன்னதாக மாஸ்டர் படத்தின் பாடல்கள் செம ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர்காக வெறித்தனமாக வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள். அதே சமயத்தில் அவ்வப்போது மாஸ்டர் படத்தில் இருந்து ஏதாவது ஒரு செய்திகள் வெளிவந்து ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
முன்னதாக மாளவிகா மோகனனுக்கு டப்பிங் வேலை பார்த்த ரவீனா என்பவர் படத்தைப் பற்றி பெருமையாக பேசிய நிலையில், படத்தின் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி மாஸ்டர் படம் பிரமாண்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு ரசிகர்கள் வெறி ஏத்தி கொண்டிருக்கிறார்கள். மாஸ்டர் படத்தை விடவில்லை என்றாலும் மாஸ்டர் டிரைலர் ஆவது விடுங்கள் என தினமும் குறைந்தது நூறு பேராவது ட்விட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தைப் பற்றிய கூறிய செய்தி ஒன்று இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றன.
மாஸ்டர் படத்தை இதுவரை 10 முறை பார்த்து விட்டதாகவும் 10 முறையும் புதிதாக இருப்பதைப்போல் தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக மாஸ்டர் படம் மரண மாஸ் ஹிட் அடிக்கும் என தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் எப்போது ட்ரெய்லர் என அவரை நச்சரித்து வருகின்றனர்.
