தளபதியின் இடத்தை பிடித்த சூர்யா.. 45வது பட இயக்குனர் இவரா.? ட்விஸ்ட் வைத்த கூட்டணி

Suriya 45: சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியின் கங்குவா நவம்பர் 14 வெளியாவது உறுதியாகிவிட்டது. இதற்கான ப்ரமோஷன் பணிகள் தொடங்கப்பட இருக்கும் நிலையில் சூர்யாவின் அடுத்த பட அப்டேட் பற்றிய தகவலும் கசிந்துள்ளது.

தற்போது இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய 44-வது படத்தில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த ப்ராஜெக்ட்டில் பூஜா ஹெக்டே, ஜெயராம், நாசர் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு டிசம்பர் மாத இறுதியில் சூர்யா தன்னுடைய 45 ஆவது படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

சூர்யாவை இயக்கும் ஆர் ஜே பாலாஜி

அந்த வகையில் இப்படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி என்பது பலருக்கும் ஆச்சரியம் கலந்த புதிய தகவலாக உள்ளது. ஏற்கனவே இவர் விஜய்க்கு ஒரு கதையை கூறி சம்மதம் வாங்கியதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் தளபதி தற்போது அரசியல் பணிக்காக சினிமாவுக்கு குட்பை சொல்ல இருக்கிறார். அதனால் ஆர்.ஜே பாலாஜி அந்த கதையை அப்படியே சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டாராம். தற்போது விஜய் நடிக்க இருந்த கதையில்தான் சூர்யா நடிக்க இருக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அமைந்திருக்கும் இந்த கூட்டணி தற்போது இன்றைய முக்கிய செய்தியாக மாறி இருக்கிறது. மேலும் இப்படத்திற்கு பிறகு சூர்யா இன்னும் இரண்டு பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடிக்க இருப்பதும் உறுதியாகியுள்ளது.

புத்தம் புது கூட்டணியில் இணைந்த சூர்யா

- Advertisement -spot_img

Trending News