அந்த கேரக்டரை கையிலெடுக்கும் மிஸ்டர் பாலிவுட்.. சூர்யாவை விட சூப்பரா நடிப்பாரே

சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான படம் சூரரை போற்று. இப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தில் சூர்யா மற்றும் அபர்ணா முரளி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும் சூரரைப்போற்று படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. மேலும் ஹிந்தியிலும் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறது.

மேலும் ஹிந்தியிலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் மோகன் பாபு நடித்த பக்தவத்சலம் நாயுடு கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாது. அது மோகன்பாபு கதாபாத்திரமா, இல்லை சூர்யாவின் நண்பர் கதாபாத்திரமா என்பது இன்றுவரை புரியாத புதிராக இருக்கிறது.

தற்போது அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டில் முக்கியமான நடிகர் நடிக்க உள்ளார். மோகன் பாபு நடித்த அந்த கதாபாத்திரத்தில் கிருத்திக் ரோஷன் நடிக்கயுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தமிழில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த சூரரைப்போற்று படம் ஹிந்தி ரீமேக்கில் எப்படி உருவாகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மேலும் தமிழில் நடித்த கதாபாத்திரங்கள் போலவே பாலிவுட்டிலும் கதாபாத்திரங்களை இயக்குநர் சுதா கொங்கரா செதுக்கி மெருகேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -