Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-sethupathi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலிவுட் படத்திலிருந்து விஜய் சேதுபதியை கழட்டிவிட்ட முன்னணி நடிகர்.. ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்களே!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவை தாண்டி தற்போது மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய படங்களில் மார்க்கெட்டை அதிகரிப்பதற்காக தொடர்ந்து ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் தவறாமல் வருடத்திற்கு ஒரு படம் நடித்து வருகிறார்.

அந்த வகையில் முதன் முதலாக பாலிவுட் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர் அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த படத்தில் இருந்து கழற்றி விடப்பட்டாராம்.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட் சினிமாவில் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் என்ற படத்தை அமீர்கான் ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்து அதன் ரீமேக் உரிமையை வாங்கி அதற்கான வேலைகளில் இறங்கினார். ஹிந்தியில் அந்த படத்திற்கு லால் சிங் சத்தா என பெயர் வைத்துள்ளனர்.

laal-singh-chadhdha

laal-singh-chaddha

ஃபாரஸ்ட் கம்ப் என்ற படத்தில் இருந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தை தமிழர் கதாபாத்திரமாக மாற்றி வடிவமைத்து அதில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க விரும்பினாராம் அமீர்கான். அதற்காக உடல் எடையை குறைக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.

ஆனால் விஜய் சேதுபதி தனது உடல் எடையை குறைப்பதில் ஈடுபாடு இல்லை என தெரிவித்ததன் மூலம் தற்போது அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதியை தூக்கி விட்டார்களாம். இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தை வழக்கம்போல் ஹிந்தி பேசும் கிராமத்து இளைஞராக மாற்றி வேறு ஒரு பாலிவுட் நடிகரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

அமீர்கானின் படங்கள் உலக அளவில் மிகப்பெரிய வசூல் செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்பேர்பட்ட ஹீரோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய் சேதுபதி அநியாயமாக இறந்து விட்டாரே என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

Continue Reading
To Top