fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

திருடி, சோத்துல உப்பு தான போட்டு திங்கிற.. ஐஸ்வர்யா ராஜேசை அசிங்க அசிங்கமாக திட்டிய பிரபல நடிகை

aiswarya-rajesh-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருடி, சோத்துல உப்பு தான போட்டு திங்கிற.. ஐஸ்வர்யா ராஜேசை அசிங்க அசிங்கமாக திட்டிய பிரபல நடிகை

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேசை பிக்பாஸ் பிரபலம் ஒருவர் வாய்க்கு வந்தபடி திருடி, சோத்துல உப்பு தானே போட்டு திங்கிற என அசிங்க அசிங்கமாக சமூக வலைத்தளத்தில் திட்டியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காக்கா முட்டை படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ். அதைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படங்கள் அனைத்திலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. சமீபத்தில்கூட விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க/பெ ரண சிங்கம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மீராமிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக கெட்ட பெயரை சம்பாதித்த பிரபலங்களில் இவரும் ஒருவர். சமீபத்தில்கூட சூர்யா மற்றும் விஜய் ஆகியோரை பற்றி அசிங்கமாக பேசி ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ராஜேசை நேரடியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளாசித் தள்ளியுள்ளார். அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் மீரா மிதுன் மாதிரியான முகத்தை வைத்துக் கொண்டுதான் சினிமாவில் பிரபலமாகி வருவதாகவும், திருடி, சோத்துல உப்பு தான போட்டு திங்கிற என வாய்க்கு வந்த படி பேசியுள்ளார்.

meera-mithun-scolded-aiswarya-rajesh

meera-mithun-scolded-aiswarya-rajesh

நாளுக்கு நாள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகளை மீரா மிதுன் தொடர்ந்து தாக்கி பேசிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராஜேஷ், மீராமிதுன் பயன்படுத்திய உடைகளை அப்படியே காப்பியடித்து அவரது படங்களில் நடித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா என தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

Continue Reading
To Top