100 கோடி பட்ஜெட்.. நடிகையை மலைபோல் நம்பி நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்

பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் அந்த நடிகை. நான்கு தேசிய விருதுகள், பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். மேலும் இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு சிலரில் இந்த நடிகையும் ஒருவர்.

மிகச் சிறு வயதிலேயே திரையுலகுக்கு வந்த இவர் பெண்கள் முன்னேற்றம் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் இருக்கும் இவருடைய நடிப்பு இப்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இப்படி எங்கு திரும்பினாலும் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் இவர் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்குவது உண்டு. இருப்பினும் இவர் தற்போது வரை மனதில் பட்டதை தைரியமாக ஊடகங்களில் பேசி வருகிறார். இது அவருக்கு பிரச்சினையை கொடுத்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இவருடைய குணம் பலருக்கும் பிடிக்கும்.

தற்போது இவருடைய நடிப்பில் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. கதையின் நாயகியாக அவர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் மீது அவருக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது இப்படம் அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

ஏகப்பட்ட பணத்தை வாரி இறைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்த நிலையில் பெரிய அளவில் வசூல் லாபம் பார்க்கவில்லை. சொல்லப்போனால் இந்த ஒரு வார காலத்தில் இப்படம் 4 கோடியை கூட வசூலிக்கவில்லை என்பது தான் பரிதாபம்.

அதிலும் இந்தப் படத்தை பார்ப்பதற்கு முதல் நாளே அவ்வளவாக கூட்டம் இல்லாத நிலையில் தற்போது ஒரு சில டிக்கெட்டுகள் தான் வியாபாரமாகி வருகிறதாம். இப்படி ஒரு மரண அடியை எதிர்பார்க்காத அந்த நடிகை தற்போது மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

Next Story

- Advertisement -