Gossip: இப்போது முன்னணி நடிகையாக நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அவர் ஆரம்ப காலகட்டத்தில் பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார். இப்போதும் இவர் சர்ச்சைகளின் ராணி தான்.
ஆனால் இவருடைய காதல் பிரேக் அப் மீடியாவில் வெகு பிரபலம். நடிக்க வந்த வேகத்திலேயே உச்ச நடிகருடன் ஜோடி போடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதை அப்படியே பிடித்துக் கொண்ட நடிகை அடுத்தடுத்த படங்களில் நடித்துமுன்னேறினார்.
அப்போது தான் வாரிசு நடிகருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் அது சில காரணங்களால் உடனே முடிவுக்கு வந்தது. அதை அடுத்து ரப்பர் நடிகருடன் இவர் திருமணம் வரை சென்றார்.
முதல் மனைவியை விட்டுக் கொடுக்காத ஹீரோ
ஆனால் அதுவும் பாதியிலேயே முடிந்து போனது. இதற்கு காரணம் நடிகர் விவாகரத்துக்கு பிறகும் முதல் மனைவியை விட்டுக் கொடுக்காதது தான். அதேபோல் நடிகை திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என அவர் கண்டிஷன் போட்டு இருக்கிறார்.
இதை எல்லாம் பார்த்த நடிகை காதலர் தன் கண்ட்ரோலில் இருக்க மாட்டார் என முடிவு செய்து உடனே பிரேக் அப் செய்து கொண்டார். இந்த விவகாரம் இப்போதும் கூட நடிகையின் மீது கரும்புள்ளியாக இருக்கிறது.
அதன் பிறகு வேறு ஒரு சினிமா பிரபலத்தை காதலித்த அவர் இப்போது குடும்பம் குழந்தை குட்டி என வாழ்ந்து வருகிறார். கணவரும் நடிகைக்கு ஏற்றது போல் தலையாட்டி பொம்மையாய் அவரை சுத்தி சுத்தி வருகிறார்.
முன்னணி நடிகையின் காதலும், பிரிவும்
- நல்லா இருந்த குடும்பத்தை கெடுத்த நடிகை
- ஆறு மணிக்கு மேல என் அவதாரமே வேற
- தொடர் தோல்வியால் கதறிய நடிகையை அரவணைத்த ஹீரோ