Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் படத்தில் நடிச்சு என்ன பண்றது, ஒரு பிரயோஜனமும் இல்ல! புலம்பும் பிரபல நடிகை

விஜய் பட வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் விஜய் படம் கிடைத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை என வருத்தத்தில் இருக்கிறாராம் பிரபல நடிகை.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். விஜய்யின் படங்கள் பெரிய அளவில் வசூல் செய்வதால் அவரது படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் விஜய் பட வாய்ப்பை பெறுவதற்காக நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சர்வ சாதாரணமாக விஜய் பட வாய்ப்பு கிடைத்தும் பெரிய அளவுக்கு சோபிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் மாளவிகா மோகனன்.

பிரபல மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமாகி கொண்டிருக்கிறார்.

மாஸ்டர் படம் குறித்த தேதியில் வெளியாகியிருந்தால் இந்நேரம் பல பட வாய்ப்புகள் தன்னை தேடி வந்திருக்கும் என நினைத்திருந்த நேரத்தில் மாஸ்டர் பட ரிலிஸில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.

vijay-malavika-mohanan-master

vijay-malavika-mohanan-master

இதனால் தனுஷ் பட வாய்ப்பைத் தவிர வேறு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் உள்ளாராம் மாளவிகா மோகனன். தற்போதைக்கு மாளவிகா மோகனன் மனதில் மாஸ்டர் படம் OTTயில் வெளியானால் கூட போதும் என நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.

Continue Reading
To Top