Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்ன சூர்யா, கட்டவுட், பேனர் கட்டும் போது ரசிகர்கள் இறந்தால் சினிமாவை தடை செய்யலாமா? சீண்டிய பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் சூர்யா. சினிமாவில் மட்டும் அல்லாமல் கல்வி ரீதியாக பல உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு பயந்து தமிழ்நாட்டில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்தி நாட்டையே அதிர வைத்துள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வை தடைசெய்யக்கோரி சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் கல்வி விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் செய்யும் தவறை புட்டு புட்டு வைத்திருந்தார்.
இதற்கு அனைத்து அரசியல் வாதிகள் சார்பிலும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். எதிர்த்து யாராவது கேள்வி கேட்டால் அவர்களை அடக்குவதுதான் அரசியல் என்பதை வெளிப்படையாக காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க தமிழ்நாட்டில் பிஜேபி கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து சூர்யாவை தாக்கிப் பேசி வருகின்றனர். பிஜேபி கட்சியில் மிக முக்கியமானவர் காயத்ரி ரகுராம்.
தமிழ் சினிமாவில் நடிகையாகவும் தற்போது நடன கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அரசியல் சார்ந்த அதிரடியான கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து வரும் காயத்ரி ரகுராம் இந்த முறை சூர்யாவை எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார்.
நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் இறந்ததால் தேர்வை தடை செய்யக் கோரும் சூர்யா, சினிமா பேனர் கட்டவுட் கட்டும் போது ரசிகர்கள் இறந்தால் சினிமாவை தடை செய்து விடலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு எந்த மாதிரி சூர்யா பதிலடி கொடுக்கப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
