fbpx
Connect with us

Cinemapettai

செல்வராகவன் உருவத்தை பார்த்து வெளியே துரத்தி விட்ட பிரபல நடிகை.. அவரிடமே பட வாய்ப்பு கேட்டு போன சோகம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செல்வராகவன் உருவத்தை பார்த்து வெளியே துரத்தி விட்ட பிரபல நடிகை.. அவரிடமே பட வாய்ப்பு கேட்டு போன சோகம்

தமிழ் சினிமாவின் புத்திசாலி இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவரும் ஒவ்வொரு படங்களுக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் இருக்கும்.

காதல் கொண்டேன் 7ஜி, ரெயின்போ காலனி போன்ற படங்கள் இவரின் திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தன. காலம் கடந்து போற்றப்படும் ஆயிரத்தில் ஒருவன் படம் கூட இவரின் கற்பனைத் திறனுக்கு ஒரு சாட்சி.

இந்நிலையில் செல்வராகவனை பிரபல நடிகை ஒருவர் வீட்டிற்குள் விடாமல் உருவத்தை பார்த்து வெளியே தள்ளி கதவைச் சாத்திய செய்தியை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த காலத்தில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தவர் வைஜெயந்தி மாலா. வைஜெயந்திமாலா தனது மகனை தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகப்படுத்த இயக்குனர்களை தேடிக் கொண்டிருந்தாராம். அப்போது செல்வராகவன் கதை சொல்ல அவரது வீட்டிற்குச் சென்றபோது அவரது உருவத்தை பார்த்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டாராம்.

அதன் பிறகு செல்வராகவன் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என ஹிட் படங்களை கொடுத்து பெரிய இயக்குனர் ஆகிவிட்டார். அதன் பிறகு மீண்டும் வைஜெயந்திமாலா தன்னுடைய மகனுக்கு ஒரு படம் செய்து தருமாறு செல்வராகவனிடம் கெஞ்சினாராம்.

ஆனால் செல்வராகவன் படம் பண்ணுவதற்கு இஸ்டம் இல்லை என கூறி ஒதுக்கி விட்டாராம். இன்று தமிழ்நாட்டு ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் செல்வராகவனை உருவ கேலி செய்ததை இலைமறை காயாக செல்வராகவன் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top