Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் இல்லைன்னா விஜய் ஒண்ணுமே கிடையாது.. அட்டர் வேஸ்ட்.. தளபதி ரசிகர்களை கோபப்படுத்திய பிரபலம்
சமீபகாலமாக பிரபல நடிகை ஒருவருக்கு நாக்கில் ஏழரை நாட்டு சனி உட்கார்ந்து நடனம் ஆடிக் கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரிந்து வருகிறது. என்றைக்கு கல்லடி படப் போகிறாரோ தெரியவில்லை.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு உச்சத்தில் இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகிய இருவரும்தான். இருவரும் பெரிய அளவு பட்ஜெட் படங்களில் நடித்து வருகின்றனர்.
அதைவிட முக்கியமாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபகாலமாக தளபதி விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் மோசமாக விமர்சித்து வந்தார் மீரா மிதுன்.
அதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் பல ரசிகர்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்ததையும் பார்க்க முடிகிறது.
சூர்யா மீராமிதுன் எதிராக அறிக்கை விட்டதால் விஜய்யும் அந்த மாதிரி அறிக்கை விட்டால் நம்ம பெரிய ஆளாகி விடலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறார் மீரா மிதுன்.
இந்நிலையில் தல தளபதி ரசிகர்கள் ஒன்றாக ட்விட்டர் பக்கத்தில் #AjithVijayPRIDEOfINDIA என்பதை டிரெண்ட் செய்து வருகின்றனர். இதைப்பார்த்த மீராமிதுன் தல அஜித்தை புகழ்ந்தும், தளபதி விஜய்யை இகழ்ந்தும் பேசியுள்ளார்.

meera-mithun-tweet
தல அஜித் இல்லை என்றால் விஜய் யார் என்றே யாருக்கும் தெரியாது என்பதை போல கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வழக்கம்போல் விஜய் ரசிகர்கள் மீராமிதுனை வச்சு செய்து வருகின்றனர்.
