Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் தலைக்கணம் பிடித்தவரா? பரபரப்பைக் கிளப்பிய தங்கச்சி நடிகை

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு முன்னணி நடிகர்களில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அடுத்ததாக விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளிவர தயாராக உள்ளது.

அதனையடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு 2021 பொங்கலுக்கு பிறகு தொடங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

எப்போதுமே யூடியூப் மற்றும் டிவி சேனல்களில் பேட்டி எடுக்கும்போது தல மற்றும் தளபதி பற்றி குறிப்பிட்ட நடிகர் நடிகைகளிடம் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

அவர்களை வைத்துதான் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி பின்னர் தளபதி விஜய்யுடன் தங்கையாக நடித்த நடிகையிடம் கேள்வியை கேட்டுள்ளனர்.

தளபதி விஜய்யுடன் தங்கையாக நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் சரண்யா. வேலாயுதம் படத்தில் தளபதி விஜய்யின் தங்கையாக பயங்கர லூட்டி அடித்திருப்பார்.

அவர் முதல் முதலில் வேலாயுதம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது தளபதி விஜய் பார்த்தவுடன் பெரிய தலைக்கணம் பிடித்தவராக இருப்பார் போல என்று நினைத்தாராம்.

ஆனால் கொஞ்சம் நாட்கள் சென்ற பிறகு தளபதி விஜய் தன்னை தன்னுடைய தங்கையை போல் அதிகமாக நேசித்ததாகவும், அந்த படப்பிடிப்பை விட்டு வெளியில் வர மனமே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சரண்யா மோகன் தற்போது திருமணமாகி குழந்தை பெற்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top