fbpx
Connect with us

Cinemapettai

என்னது அஜித் பெரிய ஸ்டாரா? சொல்லவே இல்ல.. தல ரசிகர்களை டென்ஷன் பண்ணிய அஜித் பட நடிகை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்னது அஜித் பெரிய ஸ்டாரா? சொல்லவே இல்ல.. தல ரசிகர்களை டென்ஷன் பண்ணிய அஜித் பட நடிகை

தல அஜித்தின் மாஸ் பற்றி தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்குமே தெரியும். பெரும்பாலான நடிகர் நடிகைகள் தல தளபதி ஆகிய இருவரின் ரசிகர்களாக தான் இருப்பார்கள். அதிலும் பெரும்பாலும் தல ரசிகர்கள் தான்.

ஆனால் பிரபல நடிகை ஒருவர் அஜித் அவ்வளவு பெரிய ஸ்டார் என்பது எனக்கு தெரியாது என்று கூறியது பல ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. ஆனால் அதன் பிறகு அவர் கூறிய காரணத்தை கேட்டு அனைவரும் சமாதானம் அடைந்தனர்.

தல அஜித் நடிப்பில் நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் இயக்கத்தில் ஹிந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படமாக உருவானது ஏகன். இந்த படத்தில் நயன்தாரா உடன் பிரபல நடிகை பியா பாஜ்பாய் நடித்திருந்தார்.

அந்த படத்தின் கதையே அவரைச் சுற்றிக் கொண்டிருப்பதைப் போல அமைந்திருக்கும். அஜீத்துடன் நடிப்பதற்கு முன் அஜித் இவ்வளவு பெரிய மாஸ் நடிகர் என்பது எனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் என்னதான் பெரிய மாஸ் நடிகராக இருந்தாலும் தன்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டார் எனவும் புல்லரித்துப் போய் கூறியுள்ளார். மேலும் ஏகன் படத்தில் பணியாற்றியவர்களில் நான்தான் மிகச் சிறிய பெண் எனவும் தெரிவித்துள்ளார்.

பெரிய நடிகர்கள் நிறைய பேர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதையே பெரும்பாலும் நான் பார்த்திருக்கிறேன் எனவும், அஜித் தன்னிடம் நடந்து கொண்டதும், என்னை பாதுகாத்ததும் இவ்வளவு பெரிய ஸ்டார் இப்படியே சிம்பிளாக இருக்கிறாரே என வியக்க வைத்தது என்றும் கூறியிருக்கிறார்.

இன்று முதல் தல ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் சேர்ந்து விடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top