Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.. சொன்னதே தீவிர தல ரசிகர் தான்
தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தீவிர தல ரசிகர் ஒருவர் கூறியது சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரும் வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய். இவரது படங்கள் சமீபகாலமாக பெரிய அளவு வசூல் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலும் உலகம் முழுவதும் தளபதி விஜய்யின் படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் இடையே தான் சினிமாவில் போட்டி இருப்பதாக மிகப் பெரும் புள்ளிகள் கருத்துக் கணிப்பை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தல அஜித்தின் மிகப்பெரிய ரசிகர் நடிகை ஆர்த்தி கணேஷ். ஒரு காலத்தில் பிரபலமான காமெடி நாயகியாக வலம் வந்தவர் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது தளபதி ரசிகர் ஒருவர் தளபதி விஜய்யை பற்றி ஏதேனும் கூறுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஆர்த்தி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பதில் அளித்துள்ளார்.
