Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த விஷயத்தில் விஜயகாந்த் மற்றும் அஜித் ஆகிய இருவரும் ஒன்றுதான்.. புகழும் சூர்யா பட நடிகை
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக உள்ளார். அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வலிமை படம் பேன் இந்தியா படமாக வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க நாளுக்கு நாள் தல அஜித்தின் மறுபக்கம் ரசிகர்களுக்கு தெரியவருகிறது. என்னதான் அவர் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை என குற்றம் சொன்னாலும் அவர் உதவி செய்வதில் வல்லவர்.
தல அஜித் தன்னைச் சார்ந்தவர்களை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்வதில் வல்லவர் எனவும், அவர்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் செய்ய தயங்க மாட்டார் எனவும் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.

ajith-cinemapettai
மேலும் இது போன்ற குணங்களை முதலில் விஜயகாந்த் அவர்களிடம் பார்த்து வியந்ததாகவும், அதேகுணம் அஜித்துக்கும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,
தல அஜித் மற்றும் ஜோதிகா இருவருமே ஆரம்ப காலகட்டங்களில் நிறைய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தை பார்த்துவிட்டு அஜித்துக்கு பூங்கொத்து அனுப்பி ஜோதிகா வாழ்த்து தெரிவித்தார் என்பதும் மறக்க முடியாத ஒன்று.
