Connect with us
Cinemapettai

Cinemapettai

biggboss-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெளியேறிய போட்டியாளரை மீண்டும் களமிறக்கும் பிக்பாஸ்.. அடிவயிறு கலக்கத்தில் போட்டியாளர்கள்

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களை விட இந்த சீசன் ரசிகர்களுக்கு மிகவும் போராக அமைந்து வருவதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களை தற்போது வரை கவர்ந்த வைத்துள்ள போட்டியாளர் என்றால் அது ஆரி தான். இவருக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை பிக் பாஸ் வீட்டில் அதிகம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளரும் ஆரி தான்.

அதனைத்தொடர்ந்து ஆரம்பத்தில் கொஞ்சம் வெறுப்புகளை சம்பாதித்தாலும் கடைசி சில வாரங்களாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் நேர்மையான போட்டியாளர் என பெயரெடுத்தவர் சனம் ஷெட்டி. இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரசிகர்களின் ஓட்டு எண்ணிக்கையில் விஜய் டிவி ஏமாற்று வேலை செய்து விட்டதாக அப்போதே ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. அதனைத் தொடர்ந்து கடந்த சீசனில் வனிதா இடையில் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வீட்டிற்குள் வந்ததைப்போல சனம் ஷெட்டியை களமிறக்க உள்ளார்களாம்.

இதனால் சனம் செட்டி போய்விட்டார் என சந்தோஷத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்னும் சில தினங்களில் சனம் ஷெட்டி மீண்டும் வீட்டிற்குள் வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக பிக்பாஸ் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

sanam-shetty-cinemapettai

sanam-shetty-cinemapettai

அப்படி ஒருவேளை சனம் ஷெட்டி உள்ளே என்ட்ரி கொடுத்தால் கண்டிப்பாக டைட்டிலை சனம் செட்டி தான் பெறுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Continue Reading
To Top