Connect with us
Cinemapettai

Cinemapettai

myskkin-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அழகான நடிகையை மொட்டை அடிக்க சொன்ன மிஷ்கின்.. முடியாது என சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்த பிரபலம்

தமிழ் சினிமாவில் உள்ள வித்தியாசமான இயக்குனர்களில் எப்போதுமே முதலிடம் பிடிப்பவர் மிஷ்கின் தான். அனைவரும் மாஸ் படங்கள் எடுக்க ஆசைப்பட்ட நிலையில் இவர் மட்டும் கிளாஸ் படங்கள் எடுக்க ஆசைப்பட்டவர்.

அதுமட்டுமில்லாமல் இயக்குனர்களை நம்பி தியேட்டருக்கு செல்லும் ரசிகர் கூட்டங்கள் இவருக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தைக் காட்டி ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

அந்த வகையில் கடைசியாக மிஷ்கின் இயக்கிய சைக்கோ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்த துப்பறிவாளன் 2 திரைப்படம் எதிர்பாராத பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகிறது.

மிஸ்கின் படங்களில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களுக்கு ஃபேவரிட் தான். அந்தவகையில் 2011 ஆம் ஆண்டு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த யுத்தம் செய் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றி பெற்றது.

yutham-sei-lakshmi-ramakrishnan-cinemapettai

yutham-sei-lakshmi-ramakrishnan-cinemapettai

இந்த படத்தில் சேரன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ், ஒய் ஜி மகேந்திரன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் பரிந்துரை செய்யப்பட்டவர் நடிகை நதியா தான்.

nadhiya-cinemapettai

nadhiya-cinemapettai

என்றும் இளமை நம்ம நதியா இந்த படத்தில் நடிக்காமல் போனதற்கு முக்கிய காரணம் மிஷ்கின் அவரை மொட்டை போடச் சொன்னதுதானாம். அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டு பின்னர் அந்த படத்தை மிஸ் செய்து விட்டேன் என வருத்தப்பட்டாராம்.

Continue Reading
To Top