Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் நடிகையை வீட்டுக்கு வரச் சொல்லி அந்தப் படம் போட்டுக் காட்டிய தயாரிப்பாளர்.. தலைதெறிக்க ஓடிய நடிகை
தமிழ் சினிமாவில் தேரோடும் வீதியிலே எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பயல் கோஷல். அதன்பிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கொஞ்ச காலம் வண்டியை ஓட்டிய பயல் கோஷல் அதன்பிறகு ஹிந்தியில் செட்டிலாகிவிட்டார். அங்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்ததன.
தற்போது 30 வயதான பயல் கோஷல் தன்னுடைய இளம் வயதில் அனைவரையும் வசீகரிக்கும் தோற்றத்தில் இருந்ததால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தார்கள் தயாரிப்பாளர்கள்.
சும்மா கொடுப்பார்களா தயாரிப்பாளர்கள். அந்த நடிகையை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என அள்ளி அள்ளிக் கொடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்கள் தங்களது வீட்டிற்கே நேரடியாக அவரை அழைத்துள்ளனர்.
அவரும் எதார்த்தமாக செல்ல, அந்த நடிகையிடம் பலரும் தவறாக நடக்க முயன்றுள்ளனர். அப்படித்தான் ஒரு தயாரிப்பாளர் சமீபத்தில் அந்த நடிகையை கதை சொல்வதாக கூறி வீட்டுக்கு அழைத்துள்ளார்.
இந்த நடிகையும் எதார்த்தமாக செல்ல, கதை விவாதத்தில் உட்கார்ந்தபோது டிவியில் அந்த மாதிரி படத்தை போட்டுக் காட்டியுள்ளார். இதனால் மிரண்டு போன நாயகி அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டாராம்.
இதுவரை விஷயத்தைச் சொன்ன அந்த நாயகி, தயாரிப்பாளர் யார் என்பதை மட்டும் சொல்லாமல் மறுத்துள்ளார். இதுவே அந்த மாதிரி தயாரிப்பாளர்களுக்கு இன்னும் தப்பு செய்யத் தூண்டும்.
