தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக வலம் வரும் அந்த நடிகையைப் பற்றி தான் தற்போது திரையுலகில் ஒரே பேச்சாக கிடக்கிறது. நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் அந்த நடிகை.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே அவர் பிரபல நடிகர் ஒருவரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் நன்றாக சென்று கொண்டு இருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கை சில கருத்து வேறுபாடுகளால் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
நடிகர் வீட்டில் கொடுக்கும் கெடுபிடி தாங்காமல் நடிகை தற்போது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனிமையில் இருக்கிறார். தன் போக்கில் வாழ வேண்டும் என்று நினைக்கும் நடிகை தற்போது பார்ட்டி, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என்று ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பிரபல தயாரிப்பாளர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கிறாராம். சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில் நடிகை, பிரபல நடிகருடன் குத்தாட்டம் போட்டிருந்தார். இளைஞர்கள் மத்தியில் படு வைரலான அந்த பாடலுக்கு நடிகை கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி இருந்தார்.
சொல்லப்போனால் படத்தில் நடித்த ஹீரோயினுக்கே அதை விட கம்மி சம்பளம் தானாம். இதற்குக் காரணம் நடிகை தயாரிப்பாளருடன் அதிக நெருக்கத்தில் இருந்ததுதான். மேலும் தயாரிப்பாளர் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்திலும் நடிகை தான் ஹீரோயின்.
இப்படி படு நெருக்கமாக இருந்த இவர்கள் தற்போது தனி வீடு எடுத்து தனிக்குடித்தனம் செய்யும் அளவுக்கு வந்திருக்கிறார்கள். இதைப் பற்றி தான் தற்போது திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் நடிகையின் முன்னாள் கணவரின் ரசிகர்கள் இதுக்குத்தான் உங்களை அவர் விவாகரத்து செய்துவிட்டார் என்று நடிகையை பற்றி கண்டபடி பேசி வருகின்றனர்.