fbpx
Connect with us

Cinemapettai

சூர்யாவுக்கு நடிப்புக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது.. அசிங்கப்படுத்திய நடிகை.. ஆத்திரத்தில் ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு நடிப்புக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது.. அசிங்கப்படுத்திய நடிகை.. ஆத்திரத்தில் ரசிகர்கள்!

பிரபல நடிகை ஒருவர் சூர்யாவைப் பற்றி தவறான கருத்துக்களை பதிவிட்டதால் அவரது ரசிகர்கள் கொலைவெறியில் உள்ளனர். இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.

சமீபகாலமாக திரைத்துறையில் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகளை நேரடியாக அவர்களின் பெயரை குறிப்பிட்டு வம்பிழுத்து வருகிறார் மீரா மிதுன். அந்த வகையில் திரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவரை வம்புக்கு இழுத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையைப் பற்றி தவறாக பேசியுள்ளார். இருவரும்தான் தமிழ் சினிமாவின் பெரிய மாபியாக்கள் என தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் மீராமிதுன் மீது ஆத்திரத்தில் இருந்தனர். சும்மா இருக்காமல் தற்போது சூர்யா ரசிகர்களை வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார் மீரா மிதுன்.

விஜய்யைப் போலவே வாரிசு நடிகரான சூர்யா, சினிமாவில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னிலைக்கு வந்தார் என்பது அனைவருக்குமே தெரியும். சூர்யாவுக்கு நடிப்பின் நாயகன் எனவும் இன்னொரு பெயர் உண்டு.

அப்படிப்பட்ட சூர்யாவைப் பற்றி, சூர்யாவுக்கு ஆக்டிங் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது எனக் கூறி அசிங்கபடுத்தியுள்ளார் மீரா மிதுன்.

அதோடு விடாமல் சூர்யாவின் குடும்பமான சூர்யா கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவகுமார் ஆகியோரையும் சேர்த்து சிவகுமார் குடும்பம் தான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாபியாக்கள் என தெரிவித்துள்ளார்.

அதற்கு காரணம் மீராமிதுன் நடித்த காட்சிகளை தானாசேர்ந்தகூட்டம் படத்தில் வெட்டி விட்டார்கள் என்ற ஆத்திரம் தான் என பலரும் பேசி வருகின்றனர்.

Continue Reading
To Top