Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் மலர்வதற்கு இவர்தான் காரணம்.. விரக்தியில் திட்டும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல ஜோடியாக படம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். ஆயிரம் சர்ச்சைகள் எழுந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளிநாடுகளுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்கள் காதல் செய்வதற்கு காரணமாக இருந்தது பிரபல நடிகை அமலாபால் தான் என செய்திகள் வெளியானதை நயன்தாரா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர்களிடம் அமலாபாலுக்கு ஏகப்பட்ட திட்டுகளும் விழுந்து வருகிறது.
ஆம். நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க விக்னேஷ் சிவன் முதன்முதலாக அணுகியது அமலாபாலை தான். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அமலாபால் அந்த வாய்ப்பை மறுத்தார். அதன்பிறகுதான் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் கதை சொல்ல சென்றார்.

amala-paul
கதை சொல்லும் போதே நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் மீது காதல் வந்ததாகவும், அதனால் தான் தங்கமே உன்னத்தான் என அவரைப் பற்றி உருகி பாடல் எழுதியதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனால் மொத்தமாக விக்னேஷ் சிவனிடம் சரணடைந்தார் நயன்தாரா.
அமலாபால் தான் நயன்தாரா கமிட் ஆவதற்கு காரணம் என அவரை வசை பாடி வருகின்றனர் ரசிகர்கள். நயன்தாரா சிங்கிள் ஆகவே இருந்திருக்கலாம் எனவும் அவரது ரசிகர்கள் தற்போது கவலையில் உறைந்துள்ளனர்.
சந்தானம் சொல்வதைப்போல் நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையிலிருக்கும் நாய்க்கு தான் கிடைக்க வேண்டுமென்றால் அதன்படிதான் நடக்கும் என்பதை போல் ஆகியுள்ளது விக்னேஷ் சிவனின் கதை.
