fbpx
Connect with us

Cinemapettai

ரஜினி பட வாய்ப்பை 4 முறை மறுத்த பிரபல நடிகை.. அடேங்கப்பா! யாருப்பா அவ்வளவு பெரிய ஆளு!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி பட வாய்ப்பை 4 முறை மறுத்த பிரபல நடிகை.. அடேங்கப்பா! யாருப்பா அவ்வளவு பெரிய ஆளு!

ரஜினிகாந்த் பட வாய்ப்பு என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். இளம் நடிகைகள் முதல் மூத்த நடிகைகள் வரை அனைவரும் இன்று வரை நடிக்க ஆர்வமாக தான் இருக்கிறார்கள்.

அப்படி ரஜினி பட வாய்ப்பையே நான்கு முறை வேண்டாம் என்று உதறித் தள்ளிய நாயகி இருக்கிறார் என்றால் அது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தான். அப்படிப்பட்ட நடிகை யார் என்பதை பார்ப்போம்.

ரஜினிகாந்த் என்ற காந்தம் தன்னுடைய ஸ்டைலால் மொத்த தமிழக ரசிகர்களையும் கட்டிப் போட்டு வைத்துள்ளது. வில்லன் நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவருக்கு இப்படி ஒரு வரவேற்பா என தமிழ் சினிமாவே வியந்து பார்த்தது.

ஒரு காலத்தில் எதார்த்த சினிமாக்களில் நடித்துவந்த ரஜினிகாந்த் அதன்பிறகு பில்லா, ரங்கா போன்ற மாஸ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகுதான் ரஜினியின் மார்க்கெட் இந்திய அளவில் உயர்ந்தது.

அப்படிப்பட்ட ரஜினிகாந்தின் முக்கிய படங்களான படையப்பா, பாபா, சிவாஜி, சந்திரமுகி போன்ற படங்களில் இயக்குனர்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் அந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்தாராம்.

அப்போது உலக அழகியாக இருந்து சினிமாவில் அசத்தி கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய்க்கு தொடர்ந்து ஹிந்தியில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்த காலகட்டம். அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட வாய்ப்பை நான்கு முறை கால்ஷீட் காரணமாக நிராகரித்துள்ளார்.

ஒருவழியாக ரஜினிகாந்த் எந்திரன் படத்தின் மூலம் தனக்கு பிடித்த ஐஸ்வர்யா ராயுடன் நடித்தார். ரஜினிகாந்தின் புகழை பார்க்காமல் தன்னுடைய தொழிலில் சரியாக இருந்ததால் ஐஸ்வர்யா ராய் மீது அவருக்கு மதிப்பு கூடியதாம்.

Continue Reading
To Top