fbpx
Connect with us

பிரபல தமிழ் நடிகை வீட்டில் கட்டுகட்டாக சிக்கிய போதை பொருள்.. மூட்டையை பார்த்து வியர்த்துப் போன காவல்துறை

marketless-gossip

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல தமிழ் நடிகை வீட்டில் கட்டுகட்டாக சிக்கிய போதை பொருள்.. மூட்டையை பார்த்து வியர்த்துப் போன காவல்துறை

சமீபகாலமாக பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகர் நடிகைகள் போதை பொருள் பயன்படுத்தும் வழக்கு தலைதூக்கி உள்ள நிலையில் பலரும் இதில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது, தற்கொலை அல்ல கொலை என்பதும், அவரின் காதலி ரியா என்பவர் அவருக்கு போதைப் பொருள் கொடுத்து கொன்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வரும் திரிவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் ரகுள் பிரீட் சிங்(rakul preet singh) முதல் தீபிகா படுகோனே வரை விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் ரகுள் பிரீட் சிங் வீட்டில் மட்டும் மூட்டை மூட்டையாக போதைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது எப்படி வந்தது என போலீசார் துருவி துருவி விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் தெரிய வந்தது என்னவென்றால், சுஷாந்த் சிங் காதலி ரியா தான் அவருடைய சப்ளையர் மூலம் தன்னுடைய வீட்டில் வைத்ததாகவும், வேண்டும்பொழுது அவரே வந்து எடுத்துக் கொள்வார் எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம்.

இதனால் தற்போது ரியா மேலும் சிக்கல்களில் சிக்கியுள்ள நிலையில், ரகுள் பிரீட் சிங்க்கும் சிறை தண்டனை கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

ரகுல் பிரீத் சிங் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் அயலான் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த பிரச்சனையால் அந்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிச் செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

Continue Reading
To Top