Tamil Cinema News | சினிமா செய்திகள்
முருகதாசுக்கு பெண்களின் க*பையையும், கதையையும் திருடுவது கைவந்த கலை.. போட்டுக் கொடுத்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் முருகதாஸ். பல முன்னணி நடிகர்களின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட பெருமையும் இவருக்கு உண்டு.
தற்போது விஜய்யை வைத்து நான்காவது முறையாக தளபதி65 எனும் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் பரபரப்பாக இருந்து வருகிறார்.
இந்த நேரத்தில் முருகதாஸின் பெயரை கெடுக்கும் விதமாக பிரபல நடிகை ஒருவர் முருகதாசை பற்றி அவதூறாக செய்தி ஒன்றை பரப்பியுள்ளார்.
முருகதாசுக்கு பெண்களின் கன்னித் தன்மையையும், மற்ற படங்களிலிருந்து கதைகளையும் திருடுவது ரொம்ப பிடிக்கும் என்பதை போல தெரிவித்துள்ளார்.
அவர் வேறு யாருமல்ல. நம்ம சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி தான். ஏற்கனவே இவர் முருகதாஸ் தன்னுடன் பழகி விட்டு கைவிட்டதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

sri-reddy-murugadoss
முருகதாஸ் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரையும் வம்புக்கு இழுத்துள்ளார்.
அடிக்கடி முருகதாசை ஏதாவது ஒன்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் வம்பு இழுத்துக் கொண்டே இருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.
முருகதாஸ் இதற்கு முன்வந்து பதில் கூறவில்லை என்றால் அவரின் பெயரில் இதேபோன்று செய்திகள் அதிக அளவில் பரப்ப வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.
