Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விவாகரத்துக்குப் பிறகு சினிமா சரியில்லை.. சீரியலுக்கு வரும் 29 வயது விஜய் பட நடிகை

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பிரபல நடிகை ஒருவர் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

சிந்து சமவெளி என்ற காவிய திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் மலையாள நடிகை அமலா பால். அதன் பிறகு வெளிவந்த மைனா திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து கமர்ஷியல் நாயகியாகவும் உயர்த்தி விட்டது.

தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த அமலா பால் தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

amalapaul-cinemapettai

amalapaul-cinemapettai

அதன்பிறகு அவரது சினிமா வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய பெயரை மேலும் டேமேஜ் செய்து கொண்டார்.

இதன் காரணமாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது வெப்சீரிஸ் தான் ட்ரெண்ட் என்பதால் அதிலும் நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் பிட்டா கதலு என்ற வெப்சீரிஸ் ஒன்றில் படு ஆபாசமாக நடித்திருந்தார். இருந்தாலும் வாய்ப்பு கிடைக்க வில்லையாம்.

இதன் காரணமாக விரைவில் பிரபல டிவி ஒன்றில் மிகப்பெரிய சம்பளத்திற்கு சீரியலில் நாயகியாக கடன் வழங்க உள்ளாராம் அமலாபால். அமலாபாலின் சினிமா கேரியரை பார்க்கும் போது, விவேக் சொன்ன “எப்படி இருந்த நான், இப்படி ஆகிவிட்டேன்” என்ற டயலாக் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

Continue Reading
To Top