தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்த போகும் அடுத்தடுத்த படங்கள்.. நேருக்கு நேராக கார்த்தியுடன் மோதும் குசும்பு நடிகர்

தற்போது பலரும் தமிழ் சினிமாவை வியந்து பார்க்கும் அளவுக்கு விக்ரம் திரைப்படத்தின் வசூல் பல சாதனைகளை புரிந்து வருகிறது. தமிழில் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே விக்ரம் திரைப்படம் தான் பாக்ஸ் ஆபீசை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தின் மூலம் கமல் பல மடங்கு லாபம் பார்த்து வருகிறார். அதைத் தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. அந்த திரைப்படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ஒரு சாதனையை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளிவர இருக்கிறது. மாறன் திரைப்படத்தின் தோல்வியால் சரிவை சந்தித்துள்ள தனுஷ் இந்த திரைப்படத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர் பார்த்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து விக்ரமின் கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவர இருக்கிறது. விக்ரம் பல கெட்டப்புகளில் அசத்தி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதேபோன்று சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படமும் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவர இருக்கிறது.

மாநாடு பட வெற்றிக்கு பிறகு சிம்புவின் நடிப்பில் வெளியாகும் இந்தப் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தாலும், படம் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் தற்போது நடித்து முடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் வெளிவர இருக்கிறது.

டான் திரைப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக மாறி இருக்கும் சிவகார்த்திகேயனின் இந்த படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவர இருக்கிறது. அதே நாளில் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

அந்த வகையில் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். இதன் காரணமாகவும் இந்த இரு படங்களின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. மேலும் மணிரத்னம் இயக்கியுள்ள வரலாற்றுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளிவர இருக்கிறது.

அதைத்தொடர்ந்து கேப்டன், அகிலன், சர்தார், ருத்ரன் போன்ற பல திரைப் படங்களும் ரிலீஸுக்கு தயார் நிலையில் இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் இந்த வருடத்தில் வெளிவர இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்