Connect with us
Cinemapettai

Cinemapettai

nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவை ஐட்டம் பாடலுக்கு அழைத்த முன்னணி நடிகர்.. என்ன பாத்தா எப்படி தெரியுது என டென்ஷனான அம்மணி

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான்.

ஒரு படத்துக்கு சுமார் 5 முதல் 6 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். என்னமோ வேற நடிகைகளே இல்லாததைப் போல தயாரிப்பாளர்களும் தொடர்ந்து அம்மணிக்கு பணத்தை கொட்டி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் அயிட்டம் பாடலுக்கு ஆட நயன்தாராவை அழைத்ததால் கோபமான நாயகி பட வாய்ப்பை நிராகரித்து விட்ட செய்தி தற்போது பரவி வருகிறது.

ஏற்கனவே எதிர்நீச்சல், சிவாஜி போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளதால் நயன்தாராவை கேட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் நடித்திருந்தால் தற்போது பாலிவுட் வரை புகழ் பெற்றிருப்பார்.

ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்தான் சென்னை எக்ஸ்பிரஸ். தற்போது கூட அந்த படத்தை விஜய் டிவியில் வாரத்திற்கு நான்கு முறை பார்க்கலாம்.

அந்த படத்தில் பிரியாமணி ஆடிய 1, 2, 3, 4 என்ற பாடலுக்கு முதல் முதலில் தேர்வு செய்யப்பட்டது நயன்தாரா தான். ஆனால் அந்த வாய்ப்பை நயன்தாரா நிராகரிக்க உடனடியாக பிரியாமணி அந்த வாய்ப்பை கொத்திச் சென்று ஹிந்தியிலும் சில படங்களில் நடித்தார்.

சம்பள விஷயத்தில் உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மையான தகவலாம். மற்றபடி ஆடமாட்டேன் என்று சொன்னதெல்லாம் கட்டுக்கதை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Continue Reading
To Top