Tamil Cinema News | சினிமா செய்திகள்
உதட்டு முத்தக்காட்சியில் மூன்று நாட்கள் நடித்த முன்னணி நடிகர்.. வாய் வலியுடன் சென்ற பிரபல நாயகி
பிரபல முன்னணி நடிகர் ஒருவர் உதட்டோடு உதடு முத்த காட்சிக்காக கிட்டத்தட்ட மூன்று நாட்கள் தொடர்ந்து நடித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1996ஆம் ஆண்டு அமீர்கான் மற்றும் கரிஷ்மா கபூர் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ராஜா ஹிந்துஸ்தானி.
தர்மேஷ் தர்ஷன் என்பவரின் இயக்கத்தில் உருவான ராஜா ஹிந்துஸ்தானி படம் பாக்ஸ் ஆபீசில் செம வெற்றி பெற்றது.
ராஜா ஹிந்துஸ்தானி படத்தில் அமீர்கான் மற்றும் கரிஷ்மா கபூர் ஆகிய இருவரும் உதட்டோடு உதடு முத்தக்காட்சியில் நடிக்க வேண்டி இருந்ததாம்.
வேண்டுமென்றே உதட்டு முத்தக்காட்சியை திணிக்க வில்லை என்றும், படத்தின் கதை எழுதும்போதே அந்த இடத்தில் தேவைப்பட்டதால் வைத்ததாகவும் இயக்குனர் விளக்கம் கொடுத்திருந்தார்.
உதட்டு முத்தக்காட்சி இருப்பது நடிகர் மற்றும் நடிகை இருவருக்கும் தெரிந்ததால் படப்பிடிப்பில் அது பற்றிய பிரச்சனை எதுவும் இல்லையாம். ஆனால் நினைத்த அளவுக்கு இருவராலும் முத்தம் கொடுக்க முடியாமல் தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த காட்சி மட்டுமே எடுக்கப்பட்டதாம்.
அந்த மூன்று நாட்கள் கழித்து படத்தின் நாயகி கரிஷ்மா கபூர் இரண்டு நாள் விடுமுறை எடுத்துச் சென்றுவிட்டாராம். ஒரு வேலை வாய் வீங்கி இருக்குமோ!

raja-hindustani-cinemapettai
