முகத்தை பார்க்க மாட்டேன்.. அதைத்தான் பார்ப்பேன்.. பொதுமேடையில் முகம் சுழிக்க வைத்த பிரபல நடிகர்

பொதுமேடைகளில் நடிகைகளைப் பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா. அவரது நாகரீகமற்ற பேச்சு அவரிடம் தலைக்கனம் அதிகமாகிவிட்டது என்ற அறிகுறியை காட்டுவதாக பத்திரிகைகள் தொடர்ந்து விளாசி வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா, ராசி கண்ணா, கேத்தரின் தெரசா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் காதலர் தினத்தன்று வெளியான திரைப்படம் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர். படம் முதல் காட்சியை கூட தாண்டாமல் அட்டர் பிளாப் ஆனது படக்குழுவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தை பார்ப்பதற்கு அர்ஜுன் ரெட்டி படத்தை இரண்டு வாட்டி பார்த்து விடலாம் என்றும் அளவுக்கு விமர்சனங்கள் நெகட்டிவாக வர ஆரம்பித்துவிட்டது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபடும்போதுதான் விஜய் தேவர் கொண்டா நாவடக்கம் தெரியாமல் நாகரீகமற்ற முறையில் பேசி உள்ளார்.

தொகுப்பாளர் ஒருவர், டாக்டராக இருந்தால் எங்கு பார்ப்பீர்கள் என ராசி கண்ணாவிடம் கேட்டதற்கு, குறுக்கீட்டு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, நான் மார்பகத்தை தான் பார்ப்பேன் என கொச்சையாக பேசியுள்ளார். இரண்டு நடிகைகளுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு அவர்களது உடல் உறுப்பை பற்றி அவதூறாக பேசியது நடிகைகளுக்கு முக சுளிப்பை ஏற்படுத்தியது.

இருந்தும் அவற்றை கண்டிக்காமல் இன்னும் நடிகைகள் எத்தனை நாட்களுக்குத்தான் கண்டும் காணாமல் இருக்க போகிறார்களோ தெரியவில்லை.

Leave a Comment