Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் கெட்டவார்த்தை பேசி கேட்டதில்லையே, சரக்கு அடிச்சா கிளிச்சுருவாரு.. ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த பிரபலம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தல அஜித். என்னதான் இவரைப் பற்றி நிறைய விஷயங்கள் வெளியில் வந்தாலும் அவரது ரசிகர்களுக்கு என்றுமே அவர் கடவுள் தான்.
அஜித் பற்றிய நெகட்டிவ் விஷயங்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனர் ஒருவர் கூறியுள்ளது சற்று அஜித் ரசிகர்களை சங்கடத்தில் தள்ளியுள்ளது.
நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து சமீபத்தில் பிரபல நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தல அஜித் கெட்ட வார்த்தை பேசுவார் என்றும், தங்களுடன் சேர்ந்து குடிப்பார் எனவும் கூறியுள்ளார்.
அஜித் நடித்த ஆசை படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் ஆசை படத்தில் பணியாற்றும் போது, தல அஜித் கடைமட்ட தொழிலாளர்களுடன் ஜாலியாக இருப்பதை விவரமாக கூறியுள்ளார். தன்னுடைய தொழிலாளர்களுக்கு பீர் வாங்கி கொடுப்பதும், சில சமயங்களில் நண்பர்களுடன் சேர்ந்து விட்டால் சின்ன சின்ன கெட்ட வார்த்தைகள் பேசுவோம் அல்லவா.
அதே மாதிரி ஜாலியாக தங்களிடம் பழகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அஜித் தற்போது தான் மிகவும் அமைதியாக இருப்பதாகவும், அதற்கு ஒரு சில சூழ்நிலைகளும் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மாரிமுத்து பசங்களுக்கு பள்ளி கட்டணம் அஜித்தான் கொடுத்தார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இது அஜித் யாருக்கும் உதவி செய்ய மாட்டார் என்று கூறுபவர்களுக்கு செருப்படி பதிலாக அமைந்தது.
அஜித்தை பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்ட அவரது ஹேட்டர்ஸ் இது ஒரு விஷயம் என இணையதளங்களில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். அய்யோ பாவம்!
அஜித் பற்றி மாரிமுத்து கூறிய வீடியோ:-
