Connect with us
Cinemapettai

Cinemapettai

bollywood-actresses

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இனிமேல் நடிச்சா பாலிவுட் நடிகைகளுடன் மட்டும்தான்.. மாஸ்டர் பிளான் போட்ட முன்னணி நடிகர்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் கதாநாயகிகளுடன் ஜோடி போட்ட பிரபல நடிகர் ஒருவருக்கு வர வர போர் அடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் இனி நடித்தால் பாலிவுட் நடிகைகளுடன் தான் என முடிவெடுத்து விட்டாராம்.

பெரும்பாலும் தென்னிந்திய சினிமாக்களில் மலையாள நடிகைகளுக்கு பிறகு அதிகம் பயன்படுத்தப்படுவது பாலிவுட் சினிமா நடிகைகள் தான். ஆனால் மலையாள நடிகைகளை விட பாலிவுட் நடிகைகளுக்கு சம்பளம் அதிகம் என்பதால் பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே பாலிவுட் நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.

பெரிய படம், பெரிய பட்ஜெட் என்றால் மட்டுமே பாலிவுட் நடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளை தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அப்படி வந்தவர்கள் தான் தமன்னா, ரகுல் பிரீத் சிங் போன்றவர்கள். ஆனால் தற்போது அந்த மாதிரி பாலிவுட் நடிகைகளுடன் நடிக்க மாட்டேன் என முரண்டு பிடிக்கிறார் பிரபல நடிகர் பிரபாஸ். அது மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் மலையாள நடிகைகள் அறவே வேண்டாம் என்கிறாராம்.

prabhas-cinemapettai

prabhas-cinemapettai

சமீபகாலமாக பிரபாஸ் நடிக்கும் படங்கள் உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதால் தன்னுடைய மார்க்கெட்டை பலப்படுத்த இனிமேல் பாலிவுட் நடிகைகளுடன் மட்டும்தான் நடிப்பேன் என முடிவு செய்துள்ளாராம். அதற்கு காரணமும் இருக்கிறது.

பாலிவுட் நடிகைகள் பெரும்பாலும் ஹாலிவுட் சினிமாக்களில் நடித்தவர்களாக இருப்பார்கள். அதேசமயம் ஹாலிவுட் ரசிகர்களுக்கு பாலிவுட் நடிகைகள் மிகவும் பிரபலமாக இருப்பதால் அவர்களை பயன்படுத்தி உலக அளவில் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை அதிகரித்து வசூல் வேட்டை ஆடுவது தான் பிரபாஸின் அடுத்த நோக்கமாம்.

மாஸ்டர் பிளான்!

Continue Reading
To Top