Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் நடித்தாலே அந்த நடிகருக்கு எரிச்சல் தான் வரும்.. பொதுமேடையில் போட்டுக் கொடுத்த நயன்தாரா
என்னதான் சர்ச்சைகள் தன்னை சுற்றினாலும் தமிழ் சினிமாவை பொருத்தவரை தான் தான் நம்பர் 1 நடிகை என படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் வந்த மூக்குத்தி அம்மன் படம் செம ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் என அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. மேலும் தெலுங்கு சினிமாவிலும் ஒரு முன்னணி நடிகர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இப்பேர்பட்ட நயன்தாராவின் நடிப்பை பார்த்தாலே பிரபல நடிகரும் சுத்தமாக பிடிக்காதாம். இதை நயன்தாராவே ஒரு விருது வழங்கும் விழா மேடையில் ஓபன் ஆக தெரிவித்துள்ளார். இதனால் அந்த நடிகருக்கு கொஞ்சம் சங்கடம் ஏற்பட்டு விட்டதாம்.
நடிகைகளில் எப்படி நயன்தாரா முக்கியமானவரோ அதேபோல் நடிகர்களில் சமீபகாலமாக மிகப்பெரிய வெற்றி படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வருபவர் தான் நடிகர் தனுஷ்.
நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவின் நடிப்பு தனுஷுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். நயன்தாரா நடிப்பதை கேவலமாக லுக்கு விடுவாராம். நயன்தாரா மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற திரைப்படம் யாரடி நீ மோகினி.
அப்போது தனுஷ் வளர்ந்து வரும் நடிகராக மட்டுமே இருந்தார். ஆனால் நயன்தாரா அப்போதே பிசியான நடிகையாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த உண்மையை நயன்தாரா கூறிவிட்டதால் தனுஷுக்கு சிறு சங்கடம் ஏற்பட்டு விட்டதாம்.

nayanthara-dhanush-cinemapettai
