Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரண்டாம் உலகம் படத்தில் முதலில் நடித்தது இந்த ஜோடிதான்.. ஒருவழியா பாதியில் ரெண்டு பேரும் எஸ்கேப்
தமிழ் சினிமா இயக்குனர்களில் நடைமுறை வழக்கத்தை தாண்டி அடுத்த கட்ட வாழ்க்கையை யோசிக்கும் அளவுக்கு திறமை படைத்த இயக்குனர்கள் குறைவு தான். திறமைகள் அதிகம் இருந்தாலும் அதிர்ஷ்டம் கம்மியாகத்தான் இருக்கும்.
அப்படி திறமையின் கூடமாக தமிழ் சினிமாவில் இருப்பவர்தான் செல்வராகவன். இவரது திறமைக்கு இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சான்றுதான். ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு காவியமாக படைத்திருப்பார். ஆனால் ஏனோ தெரியவில்லை, இவரது இயக்கத்தில் வரும் படங்கள் அனைத்துமே காலம் தாண்டித்தான் போற்றப்படுகிறது.
ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகும் போது அந்த படத்தை பற்றி கண்டுக்க யாருமே இல்லை. ஆனால் தற்போது உள்ள இளைஞர்கள் அந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய சொல்லி கேட்கிறார்கள். அந்த வகையில் செல்வராகவனின் இன்னொரு கற்பனை படைப்பாக வெளிவந்த திரைப்படம் தான் இரண்டாம் உலகம்.
யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு வினோதமான படைப்பாக அமைந்தது அந்தப் படம். இதனாலேயே பலருக்கு அந்த படமும் புரியாமல் போனதாகவும் கூறுகிறார்கள். அந்த படத்தில் ஆர்யா, அனுஷ்கா போன்றோர் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்வதைப் போல திரைக்கதை அமைத்து ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருப்பார் செல்வராகவன்.
ஆனால் முதன் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது தனுசும் ஆண்ட்ரியாவும் தான். சிறிது நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு பின்பு தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் விலகிக் கொண்டார்கள். அதன்பிறகுதான் இந்த கதையில் ஆர்யா மற்றும் அனுஷ்கா உள்ளே வந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் பின்னணி இசை அமைத்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

dhanush-andrea-irandam-ulagam
காலம் தாண்டி கொண்டாடப்படும் படங்களில் இரண்டாம் உலகம் ஒரு தனி இடம் பிடிக்கும். ஒருவேளை தனுஷ் நடித்திருந்தால் இந்த படம் இன்னும் மக்களிடம் பெரிய அளவில் சென்று இருக்கும் என அப்போதே பரவலான கருத்துக்கள் கோலிவுட் வட்டாரங்களில் இருந்தன.
