Connect with us
Cinemapettai

Cinemapettai

muthu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முத்து பட வாய்ப்பை இழந்தேன், அதுக்கப்புறம் 26 வருஷமா ரஜினி கூட சேர முடியல.. புலம்பும் பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிப்பில் இன்றும் மறக்க முடியாத படமாக இருப்பது முத்து. இன்று சன் டிவியில் போட்டாலும் இந்த படத்தை பார்க்க தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

தனிப்பட்ட ரசிகர்களையும் தாண்டி அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்த திரைப்படமாகவும் முத்து அமைந்தது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய முத்து படம் அன்றைய காலகட்டத்தில் அதிக வசூல் செய்த படமாகவும், அதிக நாட்கள் தியேட்டரில் ஓடிய படமாகவும் அமைந்தது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேரியரில் உள்ள முக்கிய திரைப்படங்களில் முதலாவது திரைப்படமாக முத்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு சூப்பர் ஹிட்டடித்த இந்த படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரம் சரத்பாபுவுக்கு கிடைத்தது.

ஆனால் சரத்பாபு கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் மலையாள நடிகர் ஜெயராம் தான். ரஜினியை அடிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அந்த படத்தை வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்தார்.

ஆனால் அதன் பிறகு வேறு எந்த ஒரு படத்திலாவது வாய்ப்பு கிடைக்கும் என 26 வருடமாக காத்திருப்பதாகவும், இனிமேலும் அது நடக்குமா என்ற நம்பிக்கை தனக்கு இல்லை எனவும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

மலையாளத்திலிருந்து வந்து தமிழில் பிரபலமான நடிகர்களில் ஜெயராமும் ஒருவர். இவருக்கு மோகன்லால் மம்முட்டி அளவுக்கு ரசிகர்கள் இல்லை என்றாலும் தன்னுடைய தரமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஜெயராம் நடித்த தமிழ் படங்களில் உங்களைக் கவர்ந்த படம் என்ன என்பதை கமெண்டுகளில் பதிவு செய்யலாம்.

jayaram-cinemapettai

jayaram-cinemapettai

Continue Reading
To Top