Connect with us

Cinemapettai

மாநாடு படத்திலிருந்து விலகிய முக்கிய நடிகர்.. அட போங்கடா என கவலையில் சிம்பு

simbu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாநாடு படத்திலிருந்து விலகிய முக்கிய நடிகர்.. அட போங்கடா என கவலையில் சிம்பு

சிம்பு என்றாலே வம்பு என்ற காலம் போய் சிம்பு என்றால் அன்பு என்ற காலம் வந்துவிட்டது போல. ஒரு காலத்தில் சிம்புவை திட்டிய தயாரிப்பாளர்கள் தற்போது அதே சிம்புவை அன்பாக பார்த்துக் கொள்கின்றனர். பட வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

அதற்கு காரணம் சிம்பு மீண்டும் தன்னுடைய சினிமா கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தது தான். தன்னுடைய புது புது படங்களை விரைவில் நடித்து முடித்து வருகிறார். மேலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சொல்லும் நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறாராம்.

அந்த வகையில் ஈஸ்வரன் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு தற்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பாண்டிச்சேரியில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

maanaadu-first-look-cinemapettai

maanaadu-first-look-cinemapettai

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் பிரேம்ஜி, கருணாகரன் மற்றும் வெங்கட்பிரபு கேங் அனைவரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென பாரதிராஜா மாநாடு படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளாராம். பாரதிராஜாவுக்கு மாநாடு படத்தில் மிகப் பெரிய கேரக்டர் இருந்த நிலையில் தேதிகள் ஒதுக்க முடியாத காரணத்தினால் விலகுகிறாராம்.

சிம்பு பெரிதும் நம்பிக்கையாக இருந்த மாநாடு படத்திலிருந்து முதல் முறையாக ஒரு நடிகர் விலகியுள்ளது அவருக்கு சங்கடத்தை கொடுத்துள்ளதாம். மேலும் பாரதிராஜா கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னாள் நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top