Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவுக்கு வில்லனாகும் மாஃபியா நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கூட்டணி
சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யா எப்பொழுது தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என தமிழ் சினிமாவே காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிட்டத்தட்ட உறுதியான தகவல் என்றால் சூர்யாவை அடுத்து இயக்கப்போவது ஹரி தான். கிராமத்து கதையம்சம் கொண்ட கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது.
இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார். சமீபத்தில்தான் மாஸ்டர், பேட்ட போன்ற படங்களில் நடித்தார் மாளவிகா. இந்த படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட அனைத்து நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் ஆகியவற்றை உறுதி செய்த பிறகுதான் படத்தின் அறிவிப்பை வெளியிடுவது என படக்குழு உறுதியுடன் உள்ளது போல. இடையில் நமக்கு தெரிந்த தகவல்களை அவ்வப்போது கூறி வருகிறோம்.
அந்த வகையில் தற்போது சூர்யாவுக்கு வில்லனாக பிரபல நடிகர் பிரசன்னா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவர் ஏற்கனவே அஞ்சாதே படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாபியா படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு மிஸ் ஆனதால் வருத்தத்தில் இருந்த பிரசன்னாவுக்கு சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஹரியின் படங்களுக்கு ஆக்ரோஷமான வில்லன்தான் தேவை என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான். இதில் பிரசன்னா எப்படி பொருந்துவார் என்பதைப் பார்ப்போம்.
மிரட்டுங்க நண்பா..
