Tamil Cinema News | சினிமா செய்திகள்
மொக்கைப் படங்கள் கொடுத்தும் சம்பளத்தில் கெடுபிடி.. முரண்டு பிடிக்கும் முன்னணி நடிகர்
தயாரிப்பாளர்களின் தங்க மகன் என அன்போடு அழைக்கப்பட்டு வந்த முன்னணி நடிகரின் நடவடிக்கைகள் தற்போது சரியில்லை என தயாரிப்பாளர்கள் தரப்பில் பேச்சுகள் எழுந்துள்ளன. விஜயமான நடிகர் முன்னுக்கு வந்து கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கு பட ரிலீஸ் காரணமாக தனது மொத்த சம்பளத்தையும் விட்டுக்கொடுத்த கதையும் உண்டு. அதன் காரணமாக பல தயாரிப்பாளர்கள் அவரது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டும் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் தற்போது அந்த நடிகரின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டது. சம்பள விஷயத்தில் கறார் செய்கிறார். முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் தற்போது வில்லனாக நடித்து வரும் நடிகர் ஒரு பேச்சுக்கு சம்பளத்தை இரட்டிப்பாக்கி கேட்க அவர்களும் கொடுக்க சம்மதித்து விட்டனர்.
இதனால் தற்போது தன்னிடம் கதை சொல்ல வரும் அனைத்து தயாரிப்பாளர்களிடம் அதே சம்பளத்தை கேட்டு வருகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். காரணம் இந்த வருடத்தில் அந்த நடிகரின் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.
ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் சம்பளத்தை ஏற்றுவது நியாயமில்லை என தயாரிப்பாளர் தரப்பு நடிகரை சகட்டு மேனிக்கு திட்டி வருகிறது. ஆனால் ஒரு சிலரோ இப்பொழுதுதான் நடிகர் பிழைக்கத் தெரிந்த பிள்ளையாய் மாறி இருக்கிறார் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இப்பதான் ஹீரோ ஹேப்பி அண்ணாச்சி.!
