fbpx
Connect with us

Cinemapettai

அமேசானில் மண்ணை கவ்விய முன்னணி நடிகரின் 25வது படம்.. நல்லவேளை தியேட்டர்ல வரல என பெருமூச்சு விட்ட நடிகர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அமேசானில் மண்ணை கவ்விய முன்னணி நடிகரின் 25வது படம்.. நல்லவேளை தியேட்டர்ல வரல என பெருமூச்சு விட்ட நடிகர்

தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் வெளியீட்டுக்கு தயாராக இருந்த படங்கள் நேரடியாக OTT தளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதில் வெளியாகும் படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி போன்ற படங்கள் மண்ணை கவ்விய நிலையில் அந்த லிஸ்டில் முன்னணி நடிகரின் படமும் இணைந்துள்ளது.

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் பரிச்சயமான நடிகராக வலம் வருபவர் நானி. நான் ஈ படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நானி அதன் பிறகு தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அவரது நேரமோ என்னமோ அவருடைய 25வது படம் அமேசான் தளத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த சில வருடங்களாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகராகவும் இவர் இருந்து வருகிறார்.

நானி 25வது படமாக உருவான திரைப்படம் வி. த்ரில்லர் கதையுடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் அந்த படத்துக்கு பெரிய விலை கொடுத்து அமேசான் நிறுவனம் ஏமாந்து விட்டதாம்.

இன்னும் சொல்லப்போனால் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் படத்தை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து v என எடுத்துள்ளார் அந்த படத்தின் இயக்குனர்.

அமேசான் தளத்தில் வெளியாகும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்தது அமேசான் தளத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று படம்தான் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top