Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் கைவிட்ட இயக்குனர்களை தேடித்தேடி வாய்ப்பு கொடுக்கும் முன்னணி நடிகர்.. தொடர் ஹிட்டு வேணும்ல!
தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யின் மார்க்கெட் எந்த உயரத்தில் இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதேபோல் விஜய்யுடன் போட்டியாக கருதப்படும் மற்ற முன்னணி நடிகர்களும் தற்போது தொடர் ஹிட் படங்களை கொடுக்க தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் நீண்ட நாட்களாக வெற்றி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த சூர்யா சூரரைப்போற்று படத்தின் மூலம் மீண்டு வந்து விட்டார் என்றே நம்பலாம்.
படத்தின் அதிரி புதிரி வெற்றி அவரை மீண்டும் உச்சாணியில் ஏற்றி உள்ளது. அடுத்தடுத்து பாண்டிராஜ், வெற்றிமாறன் ரவுண்டு கட்டி கலக்க வருகிறார்.
ஆனால் சூர்யா பாண்டிராஜ் படத்தில் நடிக்கயிருக்கும் கதை ஏற்கனவே பாண்டிராஜ் விஜய்க்கு கூறியது தான் என்கிறார்கள் சினிமா வாசிகள்.
அதுமட்டுமில்லாமல் முருகதாசை விஜய் கழட்டி விட்ட நிலையில் சமீபத்தில் சூர்யா ‘முருகதாசிடம் கதை இருந்தால் சொல்லுங்கள், படம் பண்ணலாம்’ என்று கேட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
ஆக மொத்தத்தில் விஜய் வெளியேற்றியே ஒவ்வொரு இயக்குனர்களையும் தேடித்தேடி வாய்ப்பு கொடுத்து வருகிறார் சூர்யா என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக நவரசா என்ற வெப்சீரிஸ் நெட்ப்ளிக்ஸில் விரைவில் வெளியாக உள்ளது.

vijay-suriya-cinemapettai
