Tamil Cinema News | சினிமா செய்திகள்
சன் டிவி சீரியலில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரபல நடிகரின் மகள்.. அந்த நடிகர் முகத்திற்காக கூட விட்டிருக்கலாம்!
சீரியல்களின் சங்கமம் என தமிழ்நாட்டில் பெயரெடுத்த சேனல் என்றால் அது சன் டிவிதான்.
புதிய படங்களை வாங்குவதில் போட்டி போடுவதிலும் சரி, புதிய புதிய சீரியல்களை ஒளி பரப்புவதிலும் சரி சன் டிவிக்கு நிகர் சன் டிவிதான்.
முன்னரெல்லாம் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே சீரியல் இருந்த நிலையில் தற்போது ஆறு நாட்கள் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில்கூட சீரியல்கள் ஒளிபரப்புவதை பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு பெண்களின் மத்தியில் சீரியல் மோகம் அதிகமாகி விட்டது.
சமீபத்தில் சன் டிவியில் ஆரம்பமான சீரியல்தான் பூவே உனக்காக. இந்த சீரியலில் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா நடித்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிக்கொள்ள துடியாய் துடிக்கிறாராம் ஜோவிட்டா. அதுமட்டுமில்லாமல் விரைவில் தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுக்கும்படி இயக்குனரிடமும் கோரிக்கை வைத்துள்ளார்.
தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் ஜோவிட்டா விலகுகிறார் எனவும், ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் சூசகமா விலக பார்க்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

jovitta-livingston
இனி வரும் வாரங்களில் பூவே உனக்காக சீரியலில் ஜோவிட்டாவை பார்க்க முடியாதாம்.
