Entertainment | பொழுதுபோக்கு
எஸ் ஜே சூர்யாவிற்கு கண்டிஷன் போட்ட பிரபல நடிகர்.. படம் வெற்றி பெற்ற பிறகு வாயை மூடிக் கொண்ட பிரபலம்
தமிழ் இயக்குனர்கள் பலர் பிற மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளனர். அப்படி தமிழ் இயக்குனரான எஸ்ஜே சூர்யா தெலுங்கு, ஹிந்தி போன்ற மற்ற மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.
இவரது இயக்கத்தில் வெளியான குஷி திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. அதன்பிறகு படத்தை அப்படியே தெலுங்கில் பவன் கல்யாண் வைத்து இயக்கினார்.
ஆனால் முதலில் பவன் கல்யாண் எஸ் ஜே சூர்யா பார்த்துவிட்டு கதையை கேட்க மிகவும் தயங்கி உள்ளார். பின்பு எஸ் ஜே சூர்யாவிடம் கதையைக் கேட்ட பிறகு கண்டிப்பாக இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

pawankalyan-cinemapettai
ஆனால் பவன் கல்யாண் எஸ் ஜே சூர்யாவிடம் ஒரு சில கண்டிஷன்கள் போட்டுள்ளார். அதாவது தமிழில் வெளியான குஷி படத்தில் ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டும் தான் இடம் பெற்றிருக்கும்.
ஆனால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் அதிகம் சண்டைக்காட்சிகள் தான் விரும்புவார்கள். அதனால் எஸ் ஜே சூர்யாவிடம் பவன் கல்யாண் இந்தப்படத்தில் 3 சண்டைக்காட்சியில் வைக்க வேண்டுமென கூறியுள்ளார்.
எஸ் ஜே சூர்யா தேவையில்லாமல் படத்தில் சண்டைக்காட்சியில் வைத்தால் படத்தின் வெற்றியை பாதிக்கும் என கூறியும் அவர் கேட்காததால் பின்பு உங்களுக்கு பிடித்த மாதிரி சண்டை காட்சிகள் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
இறுதியாக எஸ் ஜே சூர்யா கதைக்கு தகுந்தாற்போல் சண்டைக்காட்சியில் வடிவமைத்து தெலுங்கிலும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
ஒரு இயக்குனர் வெற்றி கொடுப்பதற்கு முன்பு பல நடிகர்களும் பல கண்டிஷன் போடுவது வழக்கம் அப்படிப் பவன் கல்யாண் பல இயக்குனர்களுக்கும் கண்டிஷன் போட்டுள்ளார்.
