Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
குடிபோதை, காதல் தோல்வியால் திசை மாறிய சினிமா வாழ்க்கை.. புது ரூட்டை பிடித்த நடிகர்
பொதுவாக சினிமா வாழ்வில் வெற்றி, தோல்வி என்பது எல்லோருக்கும் சகஜம். அதிலும் சில நடிகர்களுக்கு அடுத்தடுத்த தோல்விகள் வந்து அவர்களின் சினிமா வாழ்வையே புரட்டி போட்டு விடும். அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான் தற்போது பிரபல நடிகர் ஒருவரும் இருக்கிறார்.
பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவருக்கு சமீபகாலமாக நேரமே சரியில்லை. கடந்த சில வருடங்களாக இவரின் படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. மேலும் இவரின் தனிப்பட்ட வாழ்விலும் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தது.
இந்த நடிகர் பிரபல நடிகை ஒருவரை உருகி உருகி காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைத்த வேளையில் அந்த நடிகை இவரை பிரேக்கப் செய்து விட்டு போய்விட்டார். அதற்கு காரணமே நடிகரின் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் தான்.
இதனால் தான் காதல் கை விட்டு போனது என்பதை லேட்டாக புரிந்து கொண்ட நடிகர் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். சில கால இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் அவருக்கு ஹீரோ வாய்ப்பு ஒன்றும் சரியாக அமையவில்லை.
இதனால் யோசித்த நடிகர் பிரபல இயக்குனரின் படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் வில்லனாக நடிப்பது பார்த்த பல இயக்குனர்கள் தற்போது அவரிடம் அதே போன்ற சாயலில் பல கதைகளை கூறுகிறார்களாம். இதைப் பார்த்த நடிகர் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் யோசித்து வருகிறாராம்.
ஹீரோ வாய்ப்பு வொர்க் அவுட் ஆகாத நிலையில் தற்போது நடிகர் வில்லன் அவதாரம் எடுக்க முடிவு செய்திருக்கிறாராம். இதனால் கூடிய விரைவில் நடிகரை பல திரைப்படங்களில் நெகட்டிவ் ரோலில் நாம் பார்க்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
