ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் அவர்களுக்கு அதிக டிஆர்பி பெற்றுக்கொடுக்கும் சீரியல் என்றால் அது செம்பருத்தி சீரியல் தான். இந்த சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
தாய்மார்களை கவர்ந்த இந்த சீரியல் மீம்ஸ் கிரியேட்டர்களையும் கவரத் தவறவில்லை. அவர்களுக்குப் பல கண்டெண்டுகளை அள்ளி கொடுத்து வருகிறது. தற்போது சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தற்போது படப்பிடிப்புகளை அவசர அவசரமாக ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளதாம் ஜீ நிறுவனம். ஏற்கனவே செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்த கார்த்திக் வெளியேறியதிலிருந்து டிஆர்பி ரேட்டிங் சுத்தமாக குறைந்து விட்டது.
தயாரிப்பு தரப்புக்கும் கார்த்திக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து விட்டார். இதன் பிறகும் அந்த சீரியலுக்கு அவர் வருவாரா என்பது கேள்விக்குறிதான்.

இப்படி முக்கிய கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அந்த சீரியலில் இருந்து விலக விலக சீரியலின் தரம் குறைந்து ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் முதலில் காமெடி நடிகராக வலம் வந்த அழகப்பன் என்பவர் மீண்டும் இந்த சீரியலுக்கு வந்திருக்கிறார்.

இது படக்குழுவினருக்கு கொஞ்சம் பூஸ்ட் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதால் எப்படியாவது கார்த்திக்கையும் பேசி சரிசெய்து திரும்பக் கூட்டி வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் ஜீ நிறுவனம்.