Tamil Cinema News | சினிமா செய்திகள்
முருகதாஸ் தயாரிப்பில் நடிக்கும் பிரபல முன்னணி நடிகர்.. முட்டுக்கட்டை போடும் விநியோகஸ்தர்கள்!
கடைசியாக முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவுமே அவரது பழைய ஹிட் ரேஞ்சுக்கு இல்லை என அனைவரும் விமர்சனங்கள் எழுதி வருகின்றனர்.
அதுவுமில்லாமல் தர்பார் படத்தின் போது அந்த படம் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்ததாக விநியோகஸ்தர்கள் முருகதாஸ் வீட்டை நோக்கி படையெடுத்ததில் அதிர்ச்சியடைந்தார்.
இனி அவ்வளவு எளிதில் முருகதாசுக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காது என நினைத்துக்கொண்டிருந்த நிலையில் தளபதி65 பட வாய்ப்பை தட்டி தூக்கினார். இதுவரை இல்லாத அளவுக்கு படத்தின் கதையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறாராம்.
இதற்கிடையில் தமிழ் சினிமாவில் வரிசையாக பல வெற்றி படங்களை கொடுத்து வரும் நாயகனான ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளாராம். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே அட்லீ தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கும் நேரத்தில் முருகதாஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டது பிற்காலத்தில் இருவரது படத்திலும் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தான் என்கிறது கோலிவுட்.
ஆனால் விநியோகஸ்தர்கள் தரப்பில், முருகதாஸ் எப்படி படத்தை வெளியிடுகிறார் என்பதை பார்த்து விடுவோம் என கங்கனம் கட்டிக்கொண்டு வெயிட் செய்கிறார்களாம்.
