Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூன்று வேளை என் குடும்பம் நிம்மதியாக சாப்பிடுவதற்கு காரணமே தனுஷ் தான்.. நெகிழும் பிரபல காமெடி நடிகர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை கொண்ட நிறைய இளைஞர்கள் மற்றும் நடிகர்களை தனுஷ் தன்னுடைய படங்களில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் இன்று முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே அவரால் சினிமாவில் ஒரு நல்ல அடையாளத்துடன் நுழைய முடிந்தது. இல்லை என்றாலும் அவருடைய திறமைக்கு வந்திருப்பார்.

ஆனால் இவ்வளவு பெரிய அறிமுகம் அவருக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். அதேபோல் விஜய் டிவியில் பணியாற்றிய மற்றொரு காமெடி நடிகரான ரோபோ ஷங்கருக்கு மாரி படத்தில் வாய்ப்பு கொடுத்து உயர்த்தினார்.

மாரி படத்திற்கு பிறகு ரோபோ சங்கர் இல்லாத தமிழ் படமே கிடையாது என்கிற அளவுக்கு ஒரு வருடத்திற்கு பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் ரசிகர் ஒருவரின் உணவகம் திறப்பு விழாவுக்கு ரோபோ சங்கர் சென்றுள்ளார்.

dhanush-roboshankar-cinemapettai

dhanush-roboshankar-cinemapettai

அப்போது தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஊரடங்கு சமயத்தில் மற்றவர்களைப் போல தானும் மிகவும் சிரமத்தில் இருந்ததாகவும், அதிலிருந்து மீண்டுவர தனுஷ் மிகப்பெரிய உதவியை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த மாதிரியான உதவி என்பதை சொல்லாமல் பர்சனல் உதவி என கூறிக் கொண்டு நிறுத்தி விட்டார். மேலும் விஜய் டிவியில் மற்றொரு காமெடி பிரபலமாக இருக்கும் தீனா என்பவருக்கும் தன்னுடைய பவர் பாண்டி திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்து உயர்த்தி விட்டார் என்பதும் கூடுதல் தகவல்.

Continue Reading
To Top