Connect with us

Cinemapettai

12 வயதில் லட்சக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த பூவையார்.. நீ வேற லெவல் கண்ணா!

vijay-poovaiyar-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

12 வயதில் லட்சக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த பூவையார்.. நீ வேற லெவல் கண்ணா!

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் மூலம் பிரபலமானவர் பூவையார். விஜய் டிவி பல நடிகர்களை உருவாக்கி உள்ளது அதில் முக்கியமாக தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், காமெடி கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர், சந்தானம் இன்னும் பல நடிகர்கள் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் கானா பாடியே மக்கள் மனதில் இடம் பிடித்தவர், அந்த நிகழ்ச்சியில் மூன்றாவது பரிசை பெற்று 10 லட்சம் வரை பரிசுத் தொகையும் வென்றார். சூப்பர் சிங்கரின் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பாடி வருபவர்களும் நிறைய உண்டு. அதில் 12 வயது மதிக்கத்தக்க பூவையார் முக்கியமானவர்.

எனென்றால் 2019 வெளிவந்த பிகில் படத்தில் பாடி, தளபதியுடன் ஆடியும் உள்ளார். தளபதியின் மாஸ்டர் படத்திலும் நடித்து உள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

விக்ரம் நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் கோப்ரா படத்திலும் நடித்துள்ளார். இப்படி முன்னணி நடிகர்களுடன் நடித்து அவர் சம்பாதித்த சொத்து சென்னையில் மட்டும் சொந்தமாக ஒரு ஃபிளாட், கார் என்று கிட்டத்தட்ட 30 லட்சம் இருக்குமாம்.

இன்னும் சில மாதங்களில் கோடிகளில் சொத்தை குவித்து விடுவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு சிறு வயதில் நாம் பள்ளிக்கூடம் செல்வோம், ஆனால் பூவையார் செய்துள்ளது அவர் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும் பாராட்டி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top