fbpx
Connect with us

Cinemapettai

பாக்யராஜை பூர்ணிமாவுக்காக விட்டுக் கொடுத்தேன்! சுஹாசினி பரபரப்பு!

suhasini

News | செய்திகள்

பாக்யராஜை பூர்ணிமாவுக்காக விட்டுக் கொடுத்தேன்! சுஹாசினி பரபரப்பு!

பார்த்திபன் இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, விழாவாக மட்டும் இல்லாமல், பூர்ணிமாவுக்கு சாதனை விழாவாக முடிந்தது. தன் குருநாதர் கே.பாக்யராஜுக்கு சாதனை விழாவை எடுத்து சிறப்பித்துவிட்டார் பார்த்திபன். தமிழ் திரையுலத்தின் முன்னணி இயக்குனர்களான பாரதிராஜாவும், ஷங்கரும் வந்து வாழ்த்தினார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், ஏ.வி.எம்.சரவணன் என்று ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்த… அந்த விழாவில்தான் கே.பாக்யராஜ் பற்றி பல செய்திகள் வந்தது!

அதில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகை சுஹாசினி பேச்சி பலத்த ஆச்சர்யமும் சுவாரசியமும் இருந்தது!

“இந்த இடத்தில் இதை சொல்லலாமா, வேண்டாமான்னு தெரியல. இருந்தாலும் சொல்லிடுறேன்” என்று பேச ஆரம்பித்தவர். “டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடிக்க முதலில் எங்கிட்டதான் கேட்டாங்க. அப்போ நான் அதே தேதியை ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க கொடுத்துட்டேன். கதையை கேட்டதும் இந்த படத்தில் நடிக்காமல் போறதிற்கு மனசில்லே. இருந்தாலும், அந்த தெலுங்கு பட தயாரிப்பாளரிடம் கேட்கலாம்னு போனேன். ஆனால் அவர் விடவே இல்லை. நான் நடிக்க வேண்டிய கேரக்டர்லதான் நடிகை பூர்ணிமா நடிச்சாங்க. அந்தப்படத்தில்தான் அவங்களுக்குள்ளே காதல் வந்துடுச்சி” என்று கூறிவிட்டு, ஏதோ ஒரு அர்த்தத்தோடு சொல்லிவிட்டு போக, அரங்கத்தில் பெரும் கைத்தட்டல் வந்தது!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top